”சென்டாக்” அமைப்பிற்கு எதிராக பெற்றோர்- மாணவர் சங்கம்; புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்
புதுவை: புதுவையில் செண்டாக் அமைப்பிற்கு எதிராக இன்று பெற்றோர்- மாணவர் சங்கம் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகின்றது.
சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில் புதுச்சேரியில் கல்லூரிகளுக்கான கலந்தாய்வினை நடத்தும் "சென்டாக்" அமைப்பானது தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர்- மாணவர் சங்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் தனியார் பேருந்துகள் இன்று ஓடவில்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முழுஅடைப்பு என்பதால் கல்லூரி மாணவர்களை அழைத்துச் சென்ற தனியார் பேருந்துகள் அவர்களை இந்திராகாந்தி சிலை அருகேயே இறக்கி விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications