மனைவி கொலை விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த கணவர் தற்கொலைக்கு முயற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மனைவி கொலை தொடர்பான விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கணவர் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி அருகேயுள்ள வாணங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மனைவி ஸ்ரீரங்கம் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நாகுடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான சாட்சிகள் விசாரணைக்காக தனபாலை பாதுகாப்புடன் மூன்று போலீஸார் புதுக்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வந்தனர். அவரை முதல் மாடியில் உள்ள மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருந்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் நின்று கொண்டிருந்த தனபால் திடீரென மேலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், அவரது கால் முறிந்தது. மேலும், பல இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை முத்துலெட்சுமிரெட்டி அரசு மருத்துவமனையில் தனபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக் கைதி நீதிமன்ற கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications