மத்திய அரசின் உறுதியால் மீனவர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பதாக மத்திய அரசு உறுதியளித்ததால் புதுகோட்டை மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்கள் 40க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் அண்மையில் கைது செய்தனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

pudukottai fisherman's strike has been withdrawn

இந்நிலையில் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுக்கோட்டை மீனவர்கள் கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது.

இதையடுத்து புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The pudukottai fishermen's strike has been withdrawn due to the government's commitment to rescue the Tamil Nadu fishermen in the Sri Lankan prison.
Please Wait while comments are loading...