திமுக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது- டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் திமுக இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடும் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
கோவை: ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் திமுக இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடும் என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இதில் 5 சுற்றுகள் முடிவடைந்துள்ள வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரனே முன்னிலை பெற்றுள்ளார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு, திமுக காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகான ஆட்சியின் நிலையை ஆர் கே நகர் மக்கள் காண்பித்துவிட்டனர்.
பாஜகவை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications