புலி டீஸர் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியீடு... கேரள இளைஞர் கைது
சென்னை: விஜய் நடித்துள்ள புலி படத்தின் டிரைலரை திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்ட கேரள இளைஞரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள படம் புலி. சிபு, பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜயின் ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் தமீன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
ஹூட்டிங்...
இப்படத்தின் முக்கியக் காட்சிகள் கேரள மாநிலம் சாலக்குடியிலும், திருப்பதி அருகே தலக்கோணம் காட்டிலும் படமாக்கப் பட்டது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலும் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சில காட்சிகள் படமாக்கப் பட்டன.
எடிட்டிங்...
புலி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்த நிலையில், டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் இப்படம் ரிலீசாகும் எனத் தெரிகிறது.
டீஸர்...
இந்நிலையில், விஜய் பிறந்தநாளையொட்டி இன்று இப்படத்தின் டீஸரை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், முன்னதாக புலி பட டீஸர் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது.
புகார்...
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரில், ‘பல கோடி ரூபாய்களை முதலீடு செய்து நாங்கள் படம் தயாரிக்கிறோம். விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் டிரைலரை ரசிகர்களுக்கு விருந்தாக கொண்டு வர முடிவு செய்திருந்தோம்.
திருட்டுத்தனமாக...
அதற்குள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒலி சேர்க்கை ஸ்டூடியோவில் இருந்து யாரோ சில விஷமிகள் டிரைலரை திருடி இணையதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ டீஸர்...
இதற்கிடையே, டீஸர் இணையத்தில் லீக் ஆனதைத் தொடர்ந்து படக்குழு உடனடியாக இரவு 12 மணிக்கு வெளியிட இருந்த டீஸரை மதியமே இணையத்தில் அதிகாரபூர்வமக வெளியிட்டது.
கைது...
இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மிதுன் (28) என்பவர் கைது செய்யப் பட்டார். இவர் ஒலிசேர்க்கை ஸ்டூடியோவில் பயிற்சி பெற்று வந்தவர் ஆவார்.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications