வதந்திகளை நம்பாதீர்.. ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விற்பனை தொடரும்- அமைச்சர் காமராஜ்
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். விலையில்லா அரிசி திட்டம் தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதிர் எள்ளளவும் உண்மையில்லை என அவர் கூறினார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விலையில்லா அரிசி வழங்கும் திட்டமும் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.

விலையில்லா பொருட்கள் தொடரும்
குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோதுமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அனைத்து விலையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

தேவையில்லாத வதந்திகள்
உணவுப்பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தாலும் பொது விநியோகத் திட்டம் தொடரும் என்றார். உள்நோக்கத்துடன் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார்.

மத்திய அரசு நிபந்தனை
அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளன என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.

பருப்பு நிறுத்தம் - மறுப்பு
நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து உணவுத்துறை அமைச்சர் கமராஜ் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். பருப்பு, பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications