தப்பாப் பேசாதே..‘பீப்’ சாங்கிற்கு மலேசியப் பெண்ணின் எசப்பாட்டு.. ஆனால் டீசன்ட்டா!
சென்னை: நடிகர் சிம்புவின் சர்ச்சைக்குரிய பீப் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்ப்பாட்டு ஒன்றைப் பாடி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர். தற்போது அந்தப் பாடல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடல் இணையத்தில் வெளியானது. பெண்களை மிகவும் இழிவு படுத்தும் விதத்தில் ஆபாசமாக இருப்பதாகக் கூறி அப்பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகிறது.
பெண்கள் அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் சிம்பு மற்றும் அனிருத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

சம்மன்...
இந்தப் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தனித்தனியே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சிம்பு இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார். அனிருத்தோ இந்தப் பாடலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை எனக் கூறி கனடாவில் தங்கியுள்ளார்.

எதிர்ப்பாட்டு...
இந்த சூழ்நிலையில், சிம்புவின் பீப் பாடலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெண்கள் பக்க நியாயங்களையும் எடுத்துக் கூறும் வகையில் பாடல் ஒன்றை உருவாக்கி அதனை இணையத்தில் உலவ விட்டுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த புனிதா ராஜா என்ற பெண்.

வைரல்...
பீப் பாடலுக்கு எதிர்ப்பாட்டு என நெட்டிசன்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பாடல் தற்போது வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

தப்பா பேசாத...
தப்பா பேசாத என அந்தப் பாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப் பாடலை இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கேட்டு ரசித்துள்ளனர்.
மாமா... மச்சி...
இந்தப் பாடலில், ‘பொண்ணுங்கள தப்பா பேசாத மாமா, மச்சி.. எங்கள சீண்டி பார்க்காத... தப்பு கணக்குப் போடாத..' என பெண்கள் தரப்பு நியாயங்களை முன்னிறுத்தி வரிகள் இடம்பெற்றுள்ளன.
சும்மா சொல்லக் கூடாது பதிலுக்குத் திட்டுகிறேன் என்று ஆபாசமாக கிளம்பாமல் பாசத்துடன் வரிகளைப் போட்டுள்ளார் இந்த புனிதா ராஜா.. பாராட்டலாம்!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications