6 முறையும் தோல்வி..7-வது முறையாக தென்காசி லோக்சபா தொகுதியில் களமிறங்கும் டாக்டர் கிருஷ்ணசாமி!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: லோக்சபா தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக ஆதரவுடன் 7-வது முறையாக போட்டியிடுகிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியில் 6 முறை தோல்வியை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி இம்முறையாவது வெல்ல வேண்டும் என போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

1990களின் மத்தியில் தலித் அரசியலைப் பேசிய தலைவர்களில் ஒருவராக வீச்சாக விஸ்வரூபம் பெற்றவர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. திராவிடர் இயக்க பின்னணியில் இருந்து தனி கட்சி தொடங்கியவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தேவேந்திர குல வேளாளர்களை மையமாக வைத்து புதிய தமிழகம் கட்சித் தொடங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற டாக்டர் கிருஷ்ணசாமியால் லோக்சபா தேர்தலில் ஒரு முறை கூட வெல்ல முடியாமல் போய்விட்டது.

Puthiya Tamilagam Chief Dr Krishnasamy readies to fight Tenkasi for Seventh time

லோக்சபா தேர்தலில் ஒவ்வொருமுறையும் தென்காசி தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனாலும் ஒருமுறை கூட தென்காசி மக்கள் அவரை வெற்றி பெறவைக்கவில்லை.

தென்காசி லோக்சபா தொகுதியான காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுகிறது. 1952-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிதான் வென்றது. 1980-ல் இருந்து 1996-ம் ஆண்டு வரை மூத்த காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் இத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட்டு அருணாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால் 1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளர் முருகேசனிடம் 97,267 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் தோல்வியைத் தழுவினார். அத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி முதல் முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிட்டு 1,23,592 வாக்குகளைப் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

1998-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முதல் ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் தென்காசி தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுவது வழக்கம். 1998 முதல் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி பெற்ற வாக்குகளும் சதவீதமும்.

1998- 1,23,592 (19.15%)
1999- 1,86,220 (27.93%)
2004- 1,01,122 (14.20%)
2009- 1,16,685 (15.69%)
2014- 2,62,812 (26.19%)
2019- 3,55,389 (33.67%)

1998-ம் ஆண்டை ஒப்பிடுகையில் கூட்டணி கட்சிகள் பலத்துடன் 2 மடங்கு வாக்குகளை 2019-ல் பெற்றுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. இம்முறை அதிமுக ஆதரவுடன் தனிச் சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. அதிமுகவின் வாக்குகள் தமக்கு கிடைத்தால் எளிதாக வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் 7-வது முறையாக தென்காசியில் களமிறங்குகிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+