அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு - 42.69% பேர் ஆதரவு; மற்றவர்களுக்கு 51.68% வாய்ப்பு- கருத்துக்கணிப்பு
சென்னை : தமிழகத்தில் அதிமுகவிற்கு மீண்டும் வாய்ப்பு தருவோம் என்று 42.69% பேர் கூறியுள்ளதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது
தினத்தந்தி, நியூஸ்-7 செய்தி சேனல்களை தொடர்ந்து புதிய தலைமுறை செய்தி சேனல் தமிழக தேர்தல் கருத்து கணிப்பை திங்கட்கிழமை இரவு வெளியிட்டது.

தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், நியூஸ்-7 மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் திமுக வெல்லும் என்றும் கூறப்பட்டது.
இந்த பரபரப்பு ஓய்வதற்குள், இன்று புதிய தலைமுறை செய்தி சேனல் தான் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. ஆப்ட் நிறுவனத்துடன் இணைந்து, அந்த சேனல் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மற்றும் சென்னை ஆகியவை தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது.கல்வி கற்றோர், கல்லாதவர், ஏழை, பணக்காரர்கள், விவசாயிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல தரப்பும் வாக்களித்துள்ளதாக அந்த சேனல் கூறியுள்ளது. 'தமிழகத்தில் நாடித்துடிப்பு 2016' என்ற பெயரிலான இந்த கருத்து கணிப்பு திங்கட்கிழமை ஓளிபரப்பானது.
இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக ஆட்சியமைக்க மீண்டும் வாய்ப்பு தருவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 42.69% அதிமுகவிற்கு வாய்ப்பு தருவோம் என்று கூறியுள்ளனர்.
அதிமுக தவிர மற்றவர்களுக்கு வாய்ப்பு தருவோம் என்று 51.68% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசுக்கு 10க்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மக்கள் அளித்த மதிப்பெண்கள்
அரசுக்கு 1-4 மதிப்பெண் 33.23%;
5-7 மதிப்பெண்: 31.65%
8-10 மதிப்பெண்கள் கொடுத்தோர் 27.8%;
பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்ததோர்- 3.10%
கருத்துக்கணிப்பில் மேலும் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டுள்ளன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications