திமுக, பாஜக, மநகூ.... எந்த கூட்டணிக்கு பச்சைக்கொடி காட்டுவார் விஜயகாந்த்?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த கூட்டணிக்கு தேமுதிக வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறது திமுக. காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் இவர்களின் அழைப்பை ஏற்று திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக தன்னை இணைத்துக்கொள்ளுமா? அல்லது தன்னுடைய முடிவிற்காக காத்திருக்கும் பாஜகவின் பக்கம் செல்வாரா? இல்லை எனில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து சட்டசபைத் தேர்தலை விஜயகாந்த் சந்திப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. வழக்கமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளில் முந்திக்கொள்ளும் அதிமுக இம்முறை எந்த வித முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது.
தேமுதிகவிற்கு பஜக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதே நேரத்தில் வலுவான கூட்டணி அமைக்க நினைக்கும் திமுகவும் தேமுதிகவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நல்லமுடிவு வரும் என்று நம்புவதாக கூறியுள்ளார் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி லேசாக கூட தகவலை கசிய விடவில்லை விஜயகாந்த். கூட்டணி பற்றி 2016ம் ஆண்டு அறிவிப்பேன் என்று கூறினார். பொதுக்குழு, செயற்குழுவில் அறிவிக்கவில்லை. வரும் 20ம் தேதி காஞ்சிபுரம் மாநாடு மாற்றம் தரும் மாநாடு என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இந்த மாநாட்டில் கூட்டணி பற்றி விஜயகாந்த் மவுனம் கலைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுகவின் அழைப்பை ஏற்று அந்த கூட்டணிக்கு விஜயகாந்த் போகும் பட்சத்தில் அது வலுவான கூட்டணி என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். அதே நேரத்தில் ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையை தேமுதிக முன் வைத்தால் அதை திமுக ஏற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்புகின்றனர். திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் கூட்டணி மேலும் வலுவாகும் இது ஒரு வெற்றிக்கூட்டணியாக மாறும் என்பதும் அரசியல் வல்லுநர்களின் கருத்தாகும்.
இது ஒருபுறம் இருக்க லோக்சபா தேர்தலில் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்தித்தது தேமுதிக. மீண்டும் பாஜக அணியில் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் மக்களின் ஆதரவு எந்த அளவிற்கு கிடைக்கும் என்பதும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் முன் வைக்கும் கேள்வியாக உள்ளது.
மக்கள் நலக்கூட்டணித்தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கி விட்டாலும், விஜயகாந்தின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். முதல்வர் வேட்பாளர் என்பதை விட்டுக்கொடுக்கவும் தயாராகவே இருக்கின்றனர். ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தால் வெற்றி பெற முடியுமா? எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் நுழைய முடியுமா? என்பதும் தேமுதிகவினரின் கேள்வியாகும்.
தேமுதிக தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. 2006 தொடங்கி 2 சட்டசபை தேர்தல், 2 லோக்சபா தேர்தலை சந்தித்து விட்டது. இதில் முதலில் தனித்து போட்டியிட்டு வாக்கு வங்கியை நிரூபித்தது தேமுதிக. பின்னர் 2011ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிமுக உடனும், 2014 லோக்சபா தேர்தலில் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிட விஜயகாந்த் பச்சைக்கொடி காட்டுவார் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications