ம.ந.கூட்டணிக்கு வாங்க... ஜி.கே.வாசனுக்கு வைகோ, திருமா, ஜி.ஆர். முத்தரசன் நேரில் அழைப்பு
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலன் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது அணியில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
சட்டசபை தேர்தலில் தி.மு.க.- அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க. அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இடதுசாரிகள், மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணியின் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார்.

இக்கூட்டணியில் இணையுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வைகோ உள்ளிட்டோர் நேரில் சென்று அழைத்திருந்தனர். ஆனால் விஜயகாந்த்தோ உங்கள் கூட்டணி போனியாகாது; வாங்க தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கலாம் என ஒரே போடாக போட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்து போன வைகோ உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பின் போது, மக்கள் நலக் கூட்டணியில் இணையுமாறு வாசனுக்கு அனைவரும் அழைப்பு விடுத்தனர். இது தொடர்பாக கட்சியினருடன் கலந்து ஆலோசித்து முடிவு சொல்வதாக வாசன் கூறியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications