தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை..விஜயகாந்துடன் வாசன், ம.ந.கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.

எனினும், இக்கூட்டணியினர் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். குறிப்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் போட்டியிட் உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத்தார். அவருக்கு 3வது இடமே கிடைத்தது.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேசமயம் மதிமுக பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் போட்டியில் இருந்து விலகினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடவில்லை. கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியைத் தழுவினர்.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை, தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், தேர்தலில் பணபலத்தால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது எனக் கூறினார். மேலும் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி தொடரும் எனவும் மக்கள் நலனை காக்க, எதிர்கால இளைஞர்களின் நலனை காக்க ஆறு கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications