30 வடமாவட்ட தொகுதிகளை விட்டுத்தர மறுக்கும் விஜயகாந்த்.... ம.ந.கூ. தலைவர்கள் "ஷாக்"
சென்னை: தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீட்டின் தொடக்கத்திலேயே மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். 30 வடமாவட்ட தொகுதிகளை தேமுதிக விட்டுக்கொடுக்க முடியாது என விஜயகாந்த் பிடிவாதமாக கூறியுள்ளதால் விக்கித்துப் போயுள்ளனர் அதன் தலைவர்கள்.
தேமுதிகவை எந்த கட்சி வளைப்பது என்ற பிரயத்தனத்தில் வெற்றி பெற்றது மக்கள் நலக் கூட்டணி. தேமுதிக+ மக்கள் நலக் கூட்டணி இணைந்து "கேப்டன் விஜயகாந்த் அணி" என உதயமானது. தேமுதிக 124; மக்கள் நலக் கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால் இந்த கூட்டணி உதயமான நாளே பஞ்சாயத்தாகிவிட்டது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இடதுசாரித் தலைவர்களோ, "கேப்டன் விஜயகாந்த் அணி" என்றெல்லாம் அழைக்கமுடியாது என கறாராக சொல்லிவிட்டனர். இருப்பினும் தேமுதிகவினரோ விடாப்பிடியாக இது "கேப்டன் விஜயகாந்த் அணி"தா என கூறி வருகின்றனர்.

எந்தெந்த தொகுதிகள்...
தற்போது தொகுதிப் பங்கீட்டிலும் சிக்கல் வெடித்திருக்கிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு நேற்று சென்ற மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்துடன் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையின் போது தேமுதிக போட்டியிட உள்ள 124 தொகுதிகளின் பெயர்கள் ம.ந.கூட்டணி தலைவர்களிடம் கொடுக்கப்பட்டது.

ம.ந.கூவின் 70 தொகுதிகளில் தேமுதிக
அந்த பட்டியலைப் பார்த்ததும் ம.ந.கூ. தலைவர்கள் முகத்தில் ஈயாடாவில்லை. ஏனெனில் தேமுதிக போட்டியிட உள்ள தொகுதிகளில் 70 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பிய தொகுதிகள். இது குறித்து விஜயகாந்த்திடம் அந்த தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

தென்மாவட்டத்தில் எடுத்துக்கோங்க..
ஆனால் விஜயகாந்த் திட்டவட்டமாக அதிகபட்சமாக 10 தொகுதிகளை அதுவும் தென்மாவட்டங்களில் விட்டுத் தருகிறோம் என்று பதிலளித்திருக்கிறார். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களோ வடமாவட்டங்களில் 30 தொகுதிகளை விட்டுத்தந்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளனர். ஆனால் விஜயகாந்த்தோ இதற்கு பிடிகொடுக்கவில்லையாம்.

விருந்து புறக்கணிப்பு
இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் ஏற்பாடு செய்த விருந்தை புறக்கணித்துவிட்டு புறப்பட்டுவிட்டதாக தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமாவட்டங்களில் கணிசமான இடங்களில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட விரும்புகிறது. ஆனால் தேமுதிக இதற்கு செக் வைப்பதால் கூட்டணி என்னவாகும்? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்கள் எழுப்பப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications