"கேப்டன் விஜயகாந்த் அணி" என்ற பெயரை பயன்படுத்த தயங்கும் மநகூ தலைவர்கள்
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநாட்டில் பெயருக்கு கூட தேமுதிகவின் பெயர் இடம் பெறவில்லை. போஸ்டரில் வைகோ, முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், விஜயகாந்த் ஆகிய ஐவர் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் கேப்டன் விஜயகாந்த் அணி என்று கூறுவதில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களிடையே முரண்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி பெமினா ஹோட்டலில் இன்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு தொடங்கியது. திருச்சியில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த வழக்கறிஞர்களுடன் தேமுதிக வழக்கறிஞர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டார்.

மக்கள் நலக்கூட்டணியும் தேமுதிகவும் இணைந்து சட்டசபைத் தேர்தலை சந்திக்கின்றன. கடந்த 23ம் தேதி கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த உடனேயே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வைகோ, மக்கள் நலக்கூட்டணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்றே அழைக்கப்படும் என்று கூறினார்.
இதற்கு இடதுசாரிகள் ஆதரவளர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மக்கள் நல கூட்டணிக்கு எத்தனை தலைவர்கள் வந்து சேர்ந்தாலும், இந்த கூட்டணி, மக்கள் நல கூட்டணி என்றே அழைக்கப்படும். எக்காரணம் கொண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றார்.
இதேபோல மக்கள் நலக்கூட்டணியில் உள்ள தலைவர்களே விஜயகாந்த் அணி என்று அழைக்கப்படுவது பற்றிய வைகோவின் பேச்சுக்கு முரண்பட்டனர். ஆனால் தேமுதிகவின் பிரேமலதா மட்டுமே தன்னுடைய பேச்சின் போது கேப்டன் விஜயகாந்த் அணி என்று கூறி வருகிறார்.
தேமுதிக அடித்திருக்கும் போஸ்டர்களிலும் கேப்டன் விஜயகாந்த் கூட்டணி என்பதே இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் திருச்சியில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர் மாநாட்டிற்கான போஸ்டர்தான் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
— DMDKParty (@dmdkparty2005) March 25, 2016
கலைநிகழ்சிகள் ஆரம்பம் ... pic.twitter.com/rjCDp5Nwfl
அந்த போஸ்டரில் பஞ்சபாண்டவர்களாக கூறிக்கொள்ளும் தலைவர்கள் 5 பேரின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தாலும் கேப்டன் விஜயகாந்த் அணி என்ற பெயர் இடம் பெறவில்லை. மாறாக மக்கள் நலக்கூட்டணி என்ற வாசகம் மட்டுமே போஸ்டரில் உள்ளது.
ஏற்கனவே மக்கள் நலக்கூட்டணி தேமுதிக அணியா? விஜயகாந்த் அணியா என்பதை கூறுவதிலேயே சர்ச்சைகளும், சங்கடங்களும் நீடிக்கும் நிலையில் போஸ்டரில் பேரை போடுவதிலும் சர்ச்சை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications