முதல்வர் வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திருமா.
சென்னை: தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்று மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதன் மூலம் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளாராக விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட உள்ளதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திருமாவளவன்.
மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து உருவாக்கியுள்ள மக்கள் நலக்கூட்டணி மதுரையில் மிகப்பிரம்மாண்டமான மாநாடு நடத்தி தேர்தலுக்கு தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளது. நான்கு கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியை எப்படி உடைக்கலாம் என்று சில கட்சிகள் கங்கணம் கட்சிக்கொண்டுள்ளனர். மதுரையில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து பெரிய கட்சிகளே அசந்து போய்விட்டனவாம். இந்த கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வைத்து சிண்டு முடியவும் சிலர் தயாராகி வருகின்றனராம்.
நல்லக்கண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்பதில் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் வரிந்து கட்டுகிறது. கூட்டணி ஒருங்கிணைப்பாளராக உள்ள வைகோவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்பது அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அதை உடனடியாக மறுத்து பேட்டியளித்தார் வைகோ. ஆனால், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் போகுமிடமெல்லாம், கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்தால் தான் மக்களிடம் ஓட்டு வாங்க முடியும் என்று 4 கட்சி நிர்வாகிகளும் நெருக்கடி கொடுக்கிறார்களாம்.

முதல்வர் வேட்பாளர் திருமாவளவன்?
இந்த நிலையில் மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக திருமாவளவனை அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டதாக நேற்று செய்தி வெளியானது. இது மக்கள் நலக்கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இதற்கு உடனடியாக விளக்கம் அளித்தார் ரவிக்குமார்.
அவர் தனது பதிவில், தேர்தலில் முன்கூட்டியே முதல்வர் வேட்பாளரையோ பிரதமர் வேட்பாளரையோ அறிவித்து அவரை முன்னிறுத்தி வாக்கு கேட்பது இந்திய பாராளுமன்ற தேர்தல் முறைக்கு எதிரானது. அது, அதிபர் ஆட்சி முறைக்கானது எனவே முதல்வர் வேட்பாளர் என எவரையும் அறிவிப்பதில்லை என்பதே மக்கள் நலக் கூட்டணியின் நிலைப்பாடு. நான் கேட்பது மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எமது கட்சியின் தலைவரை அறிவிக்கவேண்டும் என்பதல்ல; தலித் ஒருவர் ஏன் இங்கு முதல்வராக வரமுடியவில்லை என்பதை அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் விவாதிக்க முன்வர வேண்டும் என்பதுதான். இந்த சமூகத்தில் தலித் என்பதே தகுதியின்மையாக ஆக்கப்பட்டிருக்கிறதே என வேதனைப்படுகிறேன்.
மக்கள் நலக்கூட்டணி விடுதலைச் சிறுத்தைகளின் முன் முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும். அதைப் பலவீனப்படுத்த நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். அது போலவே 'எளிய மக்களுக்கும் அதிகாரம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்' என்ற எமது லட்சியத்திலிருந்தும் பின் வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் விளக்கம்
இதனிடையே முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள நான்கு கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே ஒன்றுகூடி, 'முதல்வர் வேட்பாளர்' குறித்து விரிவாக விவாதித்து, தெளிவாக ஒரு முடிவை அறிவித்துள்ளோம்.

முதல்வர் வேட்பாளர் யார்?
கூட்டணியின் 'குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை' முன்வைத்து மக்களைச் சந்திப்பது என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை என்றும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம். இந்நிலையில், "தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என்னும் உரையாடல் இப்போது பொதுவெளியில் தொடங்கியுள்ளது. விடுதலைச்சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப் பக்கத்தில் எழுதியதை அடிப்படையாக வைத்து, இதனைச் சிலர் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதாகத் தெரிகிறது.

தலித் முதல்வர்கள்
'வடமாநிலங்களில் சுஷில்குமார் ஷிண்டே, மாஞ்ஜி, மாயாவதி போன்றவர்கள் முதல்வராகும் அளவுக்கு அங்கே உட்கட்சி சனநாயகமும் சமூக சனநாயகமும் வளர்ச்சியடைந்துள்ளது; ஆனால், தமிழகத்தில் ஒப்புக்காகவும் அப்படியொரு பேச்சுகூட எழவில்லையே ஏன்?' - என்னும் அடிப்படையில்தான் அவர் அந்தக் கேள்வியை எழுப்பினார். அன்று அதனை எவரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இன்று அதனை ஊதிப் பெருக்கி, மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் என்னும் ஒரு தோற்றத்தை உருவாக்கிட, சிலர் பெருமுனைப்புக் கொள்கின்றனர்.

திரித்துக்கூறுவதா?
தோழர் இரவிக்குமார் அவர்கள், மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கு முன்பே,2014 இல் பொதுவெளியில் எழுப்பிய இந்த சனநாயகக் குரலை, இன்று எமது கூட்டணிக்கு எதிராக எழுப்பப்பட்ட போர்க்குரலாகத் திரித்துக் கூற முயற்சிக்கின்றனர். காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய சனநாயக சக்திகளும் இதனைத் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிக்கின்றனர் என்பது அதிர்ச்சியாகவுள்ளது.

தேர்தலில் மாற்றுசக்தி
இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் மிகுந்த எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். மக்கள் நலக் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பே 'முதல்வர் வேட்பாளர்' என்கிற கேள்விக்கே இடமில்லை. இந்த ஒருமித்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். கூட்டணியை வலுவான மாற்று சக்தியாக முன்னெடுத்துச் செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications