ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும்- ஜெயானந்த் பகீர் தகவல்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படும் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையமே உத்தரவிடும் என்று ஜெயானந்த் திவாகரன் பகீர் தகவலை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
அப்போது ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்தது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்ததை அடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துவிட்டது.

வரும் 21-ஆம் தேதி தேர்தல்
இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி, சுயேச்சைகள் என களத்தில் உள்ளனர்.

தினகரனுக்கும் போலீஸ் அனுமதி
அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. ஆனால் தினகரன் தேர்தல் பிரசாரம் செய்ய போலீஸார் 4 நாள்களாக அனுமதி அளிக்கவில்லை. பின்னர் வியாழக்கிழமை அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தொப்பி கிடைக்கவில்லை
தினகரன் கேட்ட தொப்பி சின்னத்தை சுயேச்சை உறுப்பினர்களும் கேட்டதால் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ரத்தாகிவிடும்
இந்நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையமே ரத்து செய்ய உத்தரவிடும் என்று தெரிவித்துள்ளார். எனினும் இதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications