ஓ.பன்னீர்செல்வத்தின் லாபியை மீறி வேட்பாளரான தேனி பார்த்திபன்
தேனி: அதிமுக சார்பில் தேனி லோக்சபா தொகுதி வேட்பாளராக ஆர்.பார்த்திபன் அறிவிக்கப் பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் கூழையனூரைச் சேர்ந்த ஆர் பார்த்திபனின் தந்தை பெயர் ராசுத்தேவர். தற்போது 51 வயதாகும் பார்த்திபன் பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவி பெயர் நித்யா(41). இவர்களுக்கு ரூபிகா(19), அபிரூபா(18) என்ற இரு மகள்கள் உள்ளனர். .

போடி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் மற்றும் கூழையனூர் ஊராட்சித் தலைவராக பதவி வகித்த பார்த்திபன் தற்போது அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர் மற்றும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநராக செயல் பட்டு வருகிறார்.
பி.ஏ. பட்டதாரியான இவர் கடந்த கடந்த 2006-ல் போடி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பி.எஸ். லாபியை மீறி..
இத்தொகுதியை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமது மகனுக்கு வாங்கித் தருவதில் மிகவும் மும்முரம் காட்டினார். கடந்த ஓராண்டுகாலமாக இத்தொகுதியை எப்படியாவது மகனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாகவும் இருந்தார். ஆனாலும் ஜெயலலிதா, வாரிசு அரசியலுக்கு இடம் கொடுக்காமல் பார்த்திபனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் தோல்வி அடைந்தால் நிச்சயம் தம் மீதுதான் கோபப்படுவார் என்பது ஓ. பன்னீர்செல்வத்துக்கு தெரியும். இதனால் உள்ளடி வேலைகள் எதுவும் இல்லாமல் பார்த்திபனுக்கு ஓ. பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு கொடுப்பார் என்றே தெரிகிறது. 2006ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் பார்த்திபனுக்கு கை கொடுக்கவில்லை.. 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலாவது கை கொடுக்குமா என பார்ப்போம்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications