சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணித் தலைவியானார் ராதிகா
திருநெல்வேலி: நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணித் தலைவியாக அவரது மனைவி நடிகை ராதிகா நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலியில் நேற்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய நடிகை ராதிகா, மகளிருக்காக தனியாக ஒரு மாநாட்டை சமத்துவ மக்கள் கட்சி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பின்னர் சரத்குமார் பேசும்போது, கட்சியின் மாநில மகளிரணித் தலைவி பொறுப்பை ராதிகா ஏற்றால் மாநாடு நடத்த உடனடியாக ஒப்புதல் அளிப்பதாக உறுதியளித்தார்.
அதற்கு சரி என மாநாட்டுப் பந்தலிலேயே ராதிகா ஒப்புதல் தெரிவித்தார். இதையடுத்து, இன்றுமுதல் மாநில மகளிரணித் தலைவியாக ராதிகாவை நியமிப்பதாகவும், மகளிர் அணி மாநாடு நடத்தப்படும் எனவும் சரத்குமார் அறிவித்தார்.
இதுவரை சமத்துவ மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசகராக ராதிகா இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications