For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி வைர விழா... ராகுல் வருகை உறுதி!... லாலு வரவில்லையாம்!

கருணாநிதி வைரவிழாவில் பங்கேற்க ராகுல்காந்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உடல் நலக்குறைவால் லாலுபிரசாத் யாதவ் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைரவிழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் உடல்நலக்குறைவினால் விழாவில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94வது பிறந்த நாள் விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவை பிரம்மாண்டமாக திமுக கொண்டாடுகிறது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 2 வாரங்களாக நடந்து வருகிறது. கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி சட்டசபை வடிவத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேடைக்கு எதிரில் பார்வையாளர்கள் அமரும் வகையில் மிகப்பெரிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு அழைப்பு

யார் யாருக்கு அழைப்பு

பாஜக, அதிமுக தவிர மதசார்பற்ற கட்சிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் போன்ற முக்கிய தலைவர்கள் உள்பட அகில இந்திய தலைவர்கள் பலருக்கும் அழைப்பு அனுப்பட்டுள்ளது.

கருணாநிதி

கருணாநிதி

வைர விழா நாயகர் கருணாநிதி பங்கேற்பாரா? மாட்டாரா என்பது அனைவருக்குமே எதிர்பார்ப்பாக உள்ளது. முதுமை, நோய் பாதிப்பிற்கான சிகிச்சையில் உள்ளதால் மருத்துவர்கள் அனுமதித்தால் பங்கேற்பார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். எனினும் கருணாநிதி விழாவில் பங்கேற்பது சந்தேகமே என்று கோபாலபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் நிலை

பாஜகவின் நிலை

திராவிட கட்சிகள் ஒழிய வேண்டும் என்று விரும்பும் பாஜகவை எப்படி அழைப்பது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதே நேரத்தில் இன்று பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும் அவர் மறக்கவில்லை.

ராகுல் வருகை உறுதி

ராகுல் வருகை உறுதி

கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல்காந்தி சென்னை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவினால் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

English summary
Dravida Munnetra Kazhagam on account of party Supremo M Karunanidhi's 94th birthday is all set to be held on Saturday. The DMK has invited almost all parties expect the BJP. While leaders like Nitesh Kumar, Rahul Gandhi, Sharad Pawar, Sitaram Yechury are expected to be part of the event, Lalu Prasad Yadav who had confirmed his attendance is likely to miss the event owing to ill-health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X