வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆராய்ச்சி மையம்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையமானது, "வங்கக்கடலின் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் வலுவடையவில்லை. ஓரிரு தினங்களில் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவடைந்த பின்னரே எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை வைத்து, தமிழகத்தில் மழை பெய்யுமா என்பதை சொல்ல முடியும். தொடக்க நிலையில் இருப்பதால் புயல் சின்னமாக உருவெடுக்குமா என்பதையும் தற்போது உறுதிப்படுத்த முடியாது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications