7வது ஊதிய கமிஷன் பரிந்துரையை கண்டித்து செங்கோட்டையில் ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டை: 7வது ஊதிய கமிஷனில் குளறுபடி உள்ளதாகக் கூறி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
7வது ஊதிய கமிஷன் அறிக்கையில் குளறுபடி இருப்பதால் அதனை அகற்ற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் செங்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டிக்கெட் பரிசோதகர் கவுன்சில் சேர்மன் சுலைமான் தலைமையில் செயலாளர் கல்யாணி பாண்டியன் முன்னிலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னக ரயில்வே மதுரை கோட்ட தலைவர் ராமசுப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். போராட்டத்தில் தொழிலாளர்கள் 250க்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications