விபத்துகளை தவிர்க்கும் புதிய ரக ரயில் பெட்டிகள் அறிமுகம்!
நெல்லையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை: நெல்லையில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு புதிய ரக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்கு ஏற்ப பல்வேறு தொழில்நுட்பங்களை கையாண்டு புதிய ரயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது. சாதாரணமாக தற்போது புழக்கத்தில் உள்ள ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டு புதிய எல்ஹெச் பி ரயில் பெட்டிகள் ஒவ்வொரு எக்ஸ்பிரசிலும் புகுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மற்றும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் எல்ஹெச் பி கோச்சுகளுடன் இணைக்கப்பட உள்ளது. சாதாரண பெட்டிகளில் ஒரு கோச்சில் 72 இருக்கைகள் இருப்பது வழக்கம். புதிய பெட்டிகளில் 80 இருக்கைகள் இருக்கும்.
பெட்டியின் நீளம் சாதாரண பெட்டியின் நீளத்தை விட கூடுதலாக இருக்கும். பழைய பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டிக்கும் இடையில் ஸ்குரூ கூப்ளிங் வைத்து இணைப்பு வழங்கப்பட்டிருக்கும். இதில் ரயில் விபத்தில் சிக்கும் போது அதன் பின்னால் வரும் கோச்சுகளும் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக் கொள்ளும்.
ஆனால் புதிய ரக பெட்டிகளில் பெட்டிகளுக்கு இடையே சிபிசி கப்ளிங் இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ரயில் பெட்டி தடம் புரண்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ அதற்கு பின்னால் வரும் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது தவிர்க்கப்படும்.
இத்தகைய ரயில் பெட்டிகள் தற்போது சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் வரும் நாட்களில் இத்தகைய ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பெட்டிகள் சென்னையில் இருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்பெட்டிகளை பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications