டுவிட்டர் தகவலால் ரயிலில் பசியால் துடித்த குழந்தையின் பசிதீர்த்த ரயில்வே அமைச்சர் !
கான்பூர்: சமூக வலைதளமான, 'டுவிட்டர்' மூலம் கிடைத்த தகவலால் ஓடும் ரயிலில் பசியால் துடித்த 5 வயது குழந்தைக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டு பசியை போக்கினார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
உத்தரப்பிரதேச மாநிலம் மந்துவாடி ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு அதிவேக விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இதில் குசும் யாதவ் என்ற பெண் தன் ஐந்து வயது மகன் அவிஸ் உடன் வாரணாசியில் உள்ள மந்துயாதிஹ் ரயில் நிலையத்தில் ஏறினார்.

வட இந்தியாவில் கடும் மூடு பனியின் காரணமாக, ரயில் மிகவும் மெதுவாகச் சென்றதால், ரயிலில் உணவுப் பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், பசியால் அழுத தன் மகனுக்கு, பால் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல், குசும் தவித்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாத குசும் யாதவ் தனது கணவரான சத்யேந்த்ரா யாதவுக்கு போன் செய்து தகவலை கூறினார். சத்யேந்த்ரா டெல்லியில் இருந்ததால் தன்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தார்.
அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது. சமூக வலைதளமான டுவிட்டரின் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் அக்கவுண்ட்டை கண்டுபிடித்தார். அதில் தனது மகன் பசியால் துடித்துக்கொண்டிருக்கிறான். தாங்கள் உடனே உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மெசெஜ் வந்து சேர்ந்ததும் சுரேஷ் பிரபு துரித நடவடிக்கை மேற்கொண்டார். அவர் ரெயில்வே துறையை தொடர்பு கொண்டு அந்த ரயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்து அந்த சிறுவனுக்கு உடனே பால் மற்றும் பிஸ்கட் வழங்கி உதவிட உத்தரவிட்டார்.
உடனே அலகாபாத் டிவிஷனல் ரயில் மானேஜர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதன்படி அந்த ரயில் படேஹ்பூர் ரயில் நிலையம் வந்தபோது ஸ்டேஷன் மாஸ்டர் அவர்கள் இருவருக்கும் உணவு வழங்கினார்.
மேலும், அந்த ரயில் கான்பூரை வந்தடைந்தபோது ரயில்வே அதிகாரிகள் காத்திருந்து பால் மற்றும் பிஸ்கட் வழங்கினார்கள். பசியாக இருந்த தனது மகனுக்கு உடனடியாக உணவு வழங்கிய அதிகாரிகளுக்கும், அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும் அவிஸின் அம்மா குசும் நன்றி கூறினார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications