வெள்ளக்காடாக மாறிய கடலூர்.. 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது; மக்கள் பரிதவிப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழைக்கு பல இடங்கள் வெள்ளத்தால் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒரு மாத காலத்துக்குள் 3 வது கனமழையை கடலூர் மாவட்டம் சந்தித்துள்ளது. ஏற்கனவே பெய்த மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கடலூர், நெல்லிக்குப்பம், கோண்டூர், பண்ருட்டி, நெய்வேலி, ஊ.மங்கலம் பகுதிகளில் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் இங்கு இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று காலை வரை 8 ஆயிரம் பேர் வெள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெள்ளம் ஏற்படலாம் என கருதப்படும் 40 இடங்களில் தயார் நிலையில் மீட்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் நீச்சல் வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலைமை மோசமாக இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 200 தீயணைப்பு வீரர்கள் கடலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். நன்கு நீச்சல் தெரிந்த மீனவர்களும் வெள்ளப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிகள் நிரம்பி உடைவதை தடுக்கவும், வெள்ளம் பாதித்தால் அந்த இடத்தில் இருந்து உடனடியாக தண்ணீரை வெளியேற்றவும் 40 ஜே.சி.பி. எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையில் கடலூர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் நீர் தேங்கி உள்ளது. சில இடங்களில் மார்பு அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
பீமாராவ் நகர், அருந்ததிநகர், சுத்துக்குளம், நவநீத நகர், வில்வராய நத்தம், கூத்தப்பாக்கம், பாதிரிகுப்பம், பணங்காட்டு காலனி, கோண்டூர், மஞ்சகுப்பம், கடலூர் முதுநகர் ஆகிய இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கடலூர் நகரில் மட்டும் 10 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் பரப்பிலான அனைத்து விவசாயப் பயிர்களும் நாசமாகிப் போய்விட்டன. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தற்போது அடுத்த 48 மணிநேரத்துக்கு நிலைமை மேலும் மோசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கடலூரின் கதி மிக மோசமாகிவிடும் என்றே கூறப்படுகிறது
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications