நெடுவாசல், கோட்டைக்காட்டில் கொட்டும் மழையில் அனல் பறக்கும் போராட்டம்
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மக்கள் 16வது நாளாக மக்கள் கொட்டு மழையில் போராடி வருகின்றனர். கோட்டைக்காடு பகுதியில் 6வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
கோட்டைக்காடு கிராமத்திலும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது 6வது நாளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். மழை வெள்ளம் வந்தாலும் எழுந்து செல்லமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் நிறுத்தும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். உயிரோ போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

நெடுவாசல்
எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு அடைவதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டம் இந்தியா முழுக்க 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமமும் ஒன்று. இதைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதியன்று மத்திய அரசு அனுமதி வழங்கியது.

கிராம மக்கள் எதிர்ப்பு
ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்ததற்கு நெடுவாசல் கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெடுவாசல் கிராம மக்களின் போராட்டத்திற்கு தமிழகம் முழுக்க பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வருடன் பேச்சு
நெடுவாசல் போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சில தினங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என முதல்வர் உறுதியளித்தார். எனினும் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

கொட்டும் மழையில்
காலை முதலே நெடுவாசல், கோட்டைக்காடு பகுதியில் மழை பெய்து வருகிறது. மழையிலும் பொதுமக்கள் போராடி வருகின்றனர். மழையோ, வெயிலோ எதுவும் எங்களை செய்யாது என்று கூறி போராடி வருகின்றனர். கிராம மக்கள், மாணவர்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது.

நெடுவாசல் 16வது நாள்
நெடுவாசலில் 16வது நாளாக உறுதியுடன் போராடி வரும் மக்கள், எங்களின் உயிரைக் கொடுத்தாவது இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் கிராம நிர்வாகிகளின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்றும் கூறியுள்ளனர்.

கோட்டைக்காடு 6வது நாள்
கோட்டைக்காடு கிராமத்திலும் காலை முதலே மழை பெய்து வருகிறது. மழையைப் பொருட்படுத்தாமல் மாணவர்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைக்காடு கிராமத்தில் 6வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. அடாது மழை பெய்தாலும் விடாது போராடுவோம் என்று கூறி குடையை பிடித்துக்கொண்டு மக்கள் போராடி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications