விடிய விடிய பெய்த கனமழை.. சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் அடித்து ஊற்றியது
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்று காலை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. மீண்டும் இரவு முழுவதும் கனமழையாக கொட்டி வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இது நேற்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், நாகப்பட்டினம்- காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இது வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தமிழகத்தின் உள் பகுதியில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை மழைபெய்தது. சென்னை கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், ஆழவார்பேட்டை, குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு நிறுத்தி நிதானமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஓசூர், சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் இரவு முழுவதும் விடாமல் கனமழை பெய்து வருகிறது. பேரையூர், உசிலம்பட்டி பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications