தொடர்மழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வடமேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று லேசான வெயிலும், பின்னர் மழையும் என சென்னையில் வானிலை மாறி மாறிக் காணப்பட்டது. ஆனால், மாலை முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

இரவில் பெய்த மழை காலையிலும் பல இடங்களில் தொடர்ந்தது. சென்னை கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம், தாம்பரம் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியாளர் சுந்தரவள்ளி அறிவித்துள்ளார்.
இதேபோல், குமரி மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அம்மாவட்ட ஆட்சியாளர் அறிவித்துள்ளார்.

செமஸ்டர் தேர்வுகளில் மாற்றமில்லை :
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதும், திட்டமிட்டபடி இன்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி உறுப்புக் கல்லூரிகளிலும் இன்று செமஸ்டர் தேர்வு நடைபெறும் என துணைவேந்தர் தாண்டவன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்திலும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளிலும் இன்று தேர்வு நடைபெறுகிறது
ஆனால், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு, நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பைக்கில் பள்ளிக்கு வரும் மாணவர்களா நீங்க? உஷார்.. தமிழக பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு! -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications