சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் கன மழை

சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் இன்று கனமழை பெய்தது. புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் இன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 Rain lashe's in Chennai

தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று மாலை பல இடங்களில் லேசான மழை பெய்தது. நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு போன்ற இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. தி.நகர், மயிலாப்பூர், ஆவடி, அம்பத்தூர், சூளைமேடு, நந்தனம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. திருவள்ளூரில் கனமழை கனமழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அரைமணி நேரமாக கனமழை பெய்தது. நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல்லில் பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாரில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் மிதமான மழையால் பல்வேறு பகுதிகள் குளிர்ச்சி அடைந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+