மீண்டும் ஜெயலலிதாவுக்கு ஒர்க் அவுட் ஆன "மழை ராசி"... சென்னையின் "அழுகை" வீணாகவில்லை!
சென்னை: மழைக்கும் ஜெயலலிதாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம் போல. ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மழைக்குப் பெரும்பாலும் பஞ்சம் இருக்காது. இன்றும் கூட காலையிலிருந்து கொட்டித் தீர்த்த கன மழைக்கு மத்தியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த செய்தியும் வந்து சேர்ந்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு மிகவும் ராசியான மழை பெய்து வருவதால் அம்மாவுக்காக வானமே அழுவதாக அதிமுக தொண்டர்கள் கருதினார்கள். இதையே சாதகமான அறிகுறியாகவும் அவர்கள் கருதினர். பட்டாசுகளை வாங்கிக் குவித்திருந்த அவர்கள் "அம்மா"வுக்கு கட்டாயம் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் இருந்தனர். இதோ இப்போது பட்டாசு சத்தம், மழைச் சத்தத்தையும் தாண்டி காதுகளை கிழித்து வருகிறது.

வட கிழக்குப் பருவமழைக்கு தமிழகம் தயாராகி வருகிறது. சீசன் உரிய காலத்தில் தொடங்குவதற்கான சூழல் உருவாகி வருகிறது. அதற்கேற்பத தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், சில உட்புறப்பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவிலும், அதிகாலையிலும் மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவுக்கு மேல் மழை பெய்து கொட்டியது. இன்று அதிகாலை முதல் விட்டு விட்டுக் கன மழையாக பெய்து வருகிறது. இதனால் நகரம் முழுவதும் ஈரமாகி குளிர்ச்சியாக காணப்படுகிறது.
விட்டு விட்டு மழை பெய்து வருவதால் காலையில் அலுவலகம், பள்ளிகளுக்குச் செல்வோர் சற்று அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணியும் என்று மக்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications