'வருண ஜபத்துக்கு' கைமேல் பலன் - மதுரை, விருதுநகரில் மழை கொட்டியது!
மதுரை: மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த திடீர் கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் இந்தாண்டு மழை அளவு குறைவாக உள்ளது. இதனால் கோடையின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. மழை பெய்ய வேண்டி திருநெல்வேலி நெல்லையப்பர் உட்பட தமிழகத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இரு நாட்களுக்கு முன்பு, வருண ஜபம் நடத்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்தாமரை குளத்தில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தி மழை வேண்டினர். நந்தி குளிர்விக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி தீர்த்தது.
நெல்லை மாவட்டம், தேனி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பிடும்படி மழை பெய்துள்ளது. சரியாக பிற்பகல் 1.45 மணிக்குப்பிறகு திடீரெனக் கூடிய மேகங்கள் இடி மின்னலுடன் மழையாகப் பொழிந்துள்ளன.
இதில் சென்ற செவ்வாய்கிழமை சுமார் அரை மணிநேரத்தில் 37 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நேற்று பகல் 2 மணிக்கு சாரல் மழையாக ஆரம்பித்து தொடர்ந்து இரவு 9 மணிவரை சாரல் மழை பெய்தது. இந்த மழை 7 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் வற்றி்ப்போயிருந்ததாலும், நதியில் தண்ணீர் இன்றியும் விளைபயிர்களை வைத்து வாடிய விவசாயிகளுக்கு இந்த கோடை மழை மனதை குளிர்விப்பதாக இருந்தது.
கோடை வெயிலின் தாக்கத்தால் புழுக்கத்தில் அவதிப்பட்ட மக்களுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications