தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஒருவாரமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
தமிழகம் மற்றும் கேரளா என இரண்டு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எதனால்
வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று மழை பெய்ய உள்ளது. வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

ரெட் அலெர்ட்
முதலில் இதற்காக ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த ரெட் அலெர்ட் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இன்று பெய்யும்
இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் நேற்று இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றில் இருந்து நாளை வரை இந்த கனமழை தொடரும். ரெட் அலெர்ட் திரும்ப பெறப்பட்டாலும், மழை பெய்யும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

எங்கு எல்லாம் பெய்யும்
சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அரசு ஏற்கனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications