வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை...மழை தொடரும்
வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.
Recommended Video

சென்னை: வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் எனவும் அறிவித்து இருக்கிறது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கபட்டு இருக்கின்றன. சென்னையில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

வங்க கடலில் முதலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தனது வலுவை இழந்துவிட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த இந்த மழை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்றும், நேற்று முன்தினமும் குறைந்த அளவே மழை பெய்த்ததால் பல இடங்களில் வெள்ளம் வடிந்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
சென்னையிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications