மேலடுக்கு சுழற்சி மறைந்தது... வெப்பம் சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்யும்!
சென்னை: லட்சத்தீவு அருகே உள்ள மேலடுக்கு சுழற்சி மறைந்த போதும், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என நேற்று அறிவிக்கப் பட்டிருந்தது.

இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், ‘லட்சத்தீவு அருகே உள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழைபெய்துள்ளது. மேலடுக்கு சுழற்சி மறைந்து வெப்பச்சலனம் காணப்படுகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்' என்றார்.
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு :-
சங்கராபுரம் 12 செ.மீ., குளச்சல் 11 செ.மீ., பேச்சிப்பாறை 10 செ.மீ., இரணியல், வேலூர், திருப்பத்தூர் தலா 8 செ.மீ., ஏற்காடு, தர்மபுரி, பூதப்பாண்டி, போளூர் தலா 6 செ.மீ., ஒகனேக்கல், திருவண்ணாமலை, திருமயம், சூளகிரி, பாபநாசம், பூந்தமல்லி, மயிலாடி, தக்கலை, தேன்கனிக்கோட்டை, பெண்ணாகரம் தலா 5 செ.மீ., சித்தம்பட்டி, ஓமலூர், கீரனூர், திண்டிவனம் தலா 4 செ.மீ., விரிஞ்சிபுரம், வேடச்சந்தூர், செஞ்சி, வல்லம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, தாளவாடி, துவாக்குடி, ஓசூர், திருவாடானை, ஏலகிரி, திருக்கோவிலூர், பாப்பிரெட்டிப்பட்டி, தேவலா, சூரங்குடி, மேட்டூர், ராயக்கோட்டை, மணிமுத்தாறு, கொடைக்கானல், ராதாபுரம், முதுகுளத்தூர், திருக்காட்டுப்பள்ளி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications