இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி பக்கம் நல்ல மழை பெய்யுமாம்....!
சென்னை: மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்துக் கட்டிய நிலையில் இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தற்போது கோடை மழை பிக்கப் ஆகி பிய்த்து எடுத்து வருகிறது. நேற்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. சென்னையில் வெம்மை குறைந்து ஓரளவு இயல்பான வெயில் அடித்து வருகிறது.

மன்னார் வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். புதன்கிழமை தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிக பட்சமாக ஊட்டி, வால்பாறை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications