#chennairains கன மழையால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நனைந்து கோளாறுக்கு வாய்ப்பா?சென்னை கமிஷனர் பதில்
சென்னை: சென்னையில் பெய்யும் பலத்த மழையிலிருந்து நகரிலுள்ள வாக்கு எண்ணப்படும் மையங்களை பாதுகாக்கவும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் நனையாமல் இருக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பி.சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடைபெற்றநிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னையில், சென்னையில் மூன்று மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில், இரு நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதுகுறித்து சென்னை மாநராட்சி கமிஷனர் பி. சந்திர மோகன் கூறியதாவது: வாக்கு எண்ணப்படும் மையங்களில் வெள்ள பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களில் வெள்ளம் மற்றும் மழை நீர் ஒழுகாமல் இருக்க வாட்டர் புரூப் ஷீட்டுகள் போடப்பட்டுள்ளன.
நகரின் அனைத்து சுரங்கப் பாதைகளும் செயல்பாட்டில் உள்ளது. மோட்டார் பம்புகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை நகரில் அதிக காற்று காரணமாக சாய்ந்த 44 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. 17 நிவாரண மையங்கள் தயாராக உள்ளன. மாநில மற்றும் தேசிய பேரிடர் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. தேசிய பேரிடர் மையத்தின் 10 படகுகளும், மீனவர்களின் 12 படகுகளும் தயார் நிலையில் உள்ளன.
190 இடங்களில் நீர் தேங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இவற்றில் 110 இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டு, இன்னும் 80 இடங்களில் வெளியேற்றப்படும் பணி நடந்து வருகிறது. 1913 தொலைபேசியில் வரும் அழைப்புகளை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications