தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை.. தருமபுரியில் ஆலங்கட்டி மழை.. மக்கள் மகிழ்ச்சி!
Recommended Video
சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. கத்தரி வெயிலும் கூட சேர்ந்துள்ளதால் மாநிலம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருகிறது.
ஆனால் அவ்வப்போது ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இருப்பினும் வெயில் குறைந்தபாடில்லை. அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மழை
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலுக்குப் பிறகு நல்ல மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இரும்பேடு, சேவூர், பையூர் உள்ளிட்ட ஊர்களில் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலத்தில் மழை
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கருமந்துறை மணியார்குண்டம், தேக்கம்பட்டு, பகுடுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

திருவள்ளூரில் சூறைக்காற்றுடன்..
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வருகிறது. செவ்வாய்ப்பேட்டை, திருவூர், உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தருமபுரியில் ஆலங்கட்டி மழை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு, காஞ்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடலூரில் மழை
இதேபோல் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்தமழை பெய்து வருகிறது. சிறுபாக்கம், அடரி, கொளவாவ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!










Click it and Unblock the Notifications