கோவையில் மழைநீரை சேகரிக்க மழைநீர் சேமிப்பு கிணறுகள்.. நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
கோவையில் மழைநீரை சேகரிக்க மழைநீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
கோவை: மழைநீரை சேகரிக்க மழைநீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கும் முன்னரே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியது. இதனால் பெரும் பாதிப்புக்கு ஆளான பொதுமக்கள் குடத்தை எடுத்துக் கொண்டு தெரு தெருவாக தண்ணீருக்கு அலையும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கோவையில் மழை நீரை சேமிக்கும் வகையில் மழை நீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் முதல் முதலாக மழைநீர் சேமிப்பு கிணறு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் சேமிப்பு கிணறுகள் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் உயருவதாக தெரிவித்துள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications