ராஜ்டிவி இயக்குநர் மகள் திருமணம்: ஸ்டாலின், சரோஜாதேவி வாழ்த்து.. கடிதம் அனுப்பினார் ஜெ.!
சென்னை: ராஜ் டி வி இயக்குனர் எம்.ரவீந்திரன், ஆர்.விஜயலட்சுமி ஆகியோரின் மகள் ஆர். மணிப்ரியாவிற்கும் டாக்டர் கே வேலுசுவாமி டாக்டர் சந்திரலேகா ஆகியோரின் மகன் வி.அருண் முத்துவேலுவுக்கும் இன்று காலை எழும்பூரில் அமைந்துள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தில் ஏராளமான திரைஉலக பிரபலங்களும், அரசியல்தலைவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மணமக்களை வாழ்த்தி கடிதம் அனுப்பி உள்ளார்.

ஜெயலலிதா வாழ்த்து
மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் உள்ளன்போடு ‘இல்லறமல்லது நல்லறமன்று' என்னும் இன் மொழி வழியில் இல்லற வாழ்வில் இனியவை அனைத்தையும் பெற்று இனிதே வாழ எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்' என ஜெயலலிதா தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் நேரில் வாழ்த்து
இந்த திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டி ஆர் பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

கே.வி. தங்கபாலு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு, லி மெரிடியன் ஓட்டல் அதிபர் பழனி பெரியசாமி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி வெங்கடாசலம் ஆகியோர் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர்.

நடிகை சரோஜா தேவி
நடிகை சரோஜாதேவி நடிகர் செந்தில், ஏ.வி.எம். சரவணன், எம்.எஸ். குகன், அபிராமி ராமநாதன், டாக்டர் கமலா செல்வராஜ் உட்பட பல பிரமுகர்கள் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.

ராஜ் டிவி நிர்வாக இயக்குநர்கள்
திருமண விழாவிற்கு வந்தவர்களை ராஜ் டிவி நிர்வாக இயக்குனர் எம்.ராஜேந்திரன் மற்றும் எம்.ராஜரத்தினம், எம்.ரவீந்திரன் எம்.ரகுநாதன் சித்ரா லட்சுமணன் ஆகியோர் வரவேற்றனர். இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications