சங்கரன்கோவில் ராஜலட்சுமி... தமிழகத்திலேயே சூப்பர் ஜூனியர் அமைச்சர்!
சென்னை: தமிழக அமைச்சரவையிலேயே மிகவும் இளவயது அமைச்சர் என்ற பெருமை சங்கரன்கோவில் (தனி) தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜலட்சுமிக்குக் கிடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது இங்கு நடந்த இடைத் தேர்தலில் வென்ற முத்துலட்சுமி. இடையில் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டதால் அவருக்குக் கிடைக்காமல் போன அமைச்சர் பதவி ராஜலட்சுமியின் விசுவாசத்திற்கும், அடக்கத்திற்கும் பரிசாக கிடைத்துள்ளது. அதை விட முக்கியமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்ட்டி இந்தத் தொகுதிக்குள்தான் அடக்கம். அந்த வகையிலும் ராஜலட்சுமிக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது.

இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாகும். கடந்த 1980, 1984, 1991, 1996, 2001, 2006, 2011 தேர்தல்களிலும், 2012 இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இந்தத் தொகுதிக்கு அமைச்சர் பதவி கிடைப்பதும் ஜெயலலிதா அமைச்சரவையில் தொடர் கதையாக உள்ளது. முன்பு இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிர ஜெயலலிதா விசுவாசி கருப்பசாமி அமைச்சராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
தொடர்ந்து 7வது முறையாக இத்தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ள நிலையில் இங்கிருந்து தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜலட்சுமி, தன்னை எதிர்த்து மோதிய திமுக வேட்பாளர் அன்புமணி கணேசனை கிட்டத்தட்ட 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
30 வயதேயாகும் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருந்தவர். தமிழக அமைச்சரவையிலேயே மிகவும் இள வயது அமைச்சர் இவர்தான். ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications