மு.க ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார் ராஜமீனாட்சி
தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினார்.
சென்னை: சென்னையில் மு.க.ஸ்டாலினை தருமபுரி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி ராஜமீனாட்சி சந்தித்து பேசினார். தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக தெரிவித்தார் ராஜமீனாட்சி.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, பணி நிரந்தரம் செய்யவும், சென்னைக்கு பணி மாறுதல் செய்யவும் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டதாக ராஜமீனாட்சி புகார் கூறியிருந்தார்.

ஞாயிறன்று தன்னை அமைச்சர் சரோஜா வீட்டிற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் எந்த சூழ்நிலையிலும் பணியை விட்டு செல்ல மாட்டேன் என்றும் இதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளதாக கூறினார்.
அதிகாரியை மிரட்டி ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்ட அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் ராஜமீனாட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அமைச்சர் சரோஜா மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.
இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை அதிகாரி ராஜ மீனாட்சி சந்தித்து பேசினார். சந்திப்புக்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ மீனாட்சி, தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து தலைவர்களையும் சந்தித்து நன்றி கூறி வருவதாக தெரிவித்தார்.
தன்னைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் அதற்காகவே அமைச்சர் மீது புகார் அளித்ததாகவும் கூறினார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications