சட்டசபை கூட்டத்தொடர் எப்போது? நெருக்கடி தரும் ராஜ்பவன்- முட்டுக்கட்டை போடும் கார்டன்!
சென்னை: தமிழக சட்டசபையின் ஆண்டு முதலாவது கூட்டத் தொடர் எப்போது என்பதில் ஆளுநர் மாளிகையும் போயஸ் கார்டனும் மறைமுகமாக மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன என்கின்ற தலைமை செயலக வட்டாரங்கள்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறாமலேயே கடந்த ஆண்டு ஓடிவிட்டது. தற்போது ஜனவரி மாதம் பிறந்துள்ளது.

எப்போது கூட்டத் தொடர்?
இந்த ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட வேண்டும். இதற்கான தேதியை குறிப்பிட்டு தெரிவிக்குமாறு தலைமை செயலகத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறது.

கார்டனுக்கு தகவல்..
இந்த தகவலை போயஸ் கார்டனுக்கு தெரிவித்திருக்கிறார்கள் விசுவாச அதிகாரிகள். முதல்வர் பன்னீர்செல்வமும் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார்.

பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு
ஆனால் கார்டன் தரப்போ பன்னீர்செல்வத்தை முதல்வராக இருந்து கொண்டு முதலாவது கூட்டத் தொடரை நடத்தக் கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கிறதாம். இதனால் அதெல்லாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் என தலைமை செயலகத்தில் தகவல் தரும் அதிகாரிகளுக்கு பதில் தருகிறதாம் கார்டன்.

நெருக்கடி தரும் ஆளுநர் மாளிகை
அதேநேரத்தில் ஆளுநர் மாளிகை தரப்போ, விரைவாக ஒரு தேதியை குறிப்பிடுங்க... ஆளுநருக்கு நிறைய பணிகள் இருக்கிறது என குறிப்பிட்டு நெருக்கடி கொடுக்கிறதாம். அனேகமாக எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டசபை கூட்டத் தொடரை உடனே கூட்ட வலியுறுத்தி அடுத்தடுத்து அறிக்கைகள் வெளிவரும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications