ஜெ.மறைவு செய்தி டிச.4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே எனக்கு கிடைத்தது.. பகீர் கிளப்பும் ராஜேந்திர பாலாஜி
ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே கிடைத்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
Recommended Video

விருதுநகர்: ஜெயலலிதா மறைவு செய்தி எனக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கே தெரிந்துவிட்டது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகீர் கிளப்பியுள்ளார்.
மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா சகோதரன் திவாகரன் கூறுகையில் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதியே இறந்துவிட்டார். அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பு கருதி ஒரு நாள் தாமதமாக வெளியிட்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதை ஜெயக்குமார் மறுத்தார்.
இந்நிலையில் விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி தெரிவிக்கையில், கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி எனக்கு அவரது இறப்பு செய்தி வந்துவிட்டது. அன்றைய தினம் மாலை 5.20 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் போன் செய்தார்.

சீரியஸாக உள்ளார்
அப்போது முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. ரொம்பவும் சீரியஸாக உள்ளார் என்றார். பதறி அடித்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்தேன். யாரும் எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செயலாளர் பூங்குன்றனுக்கு போன் செய்தால் அவரும் எடுக்கவில்லை.

ரயில் மூலம் சென்னை
எனக்கு தெரிந்தவருக்கு போன் செய்து பூங்குன்றனிடம் கொடுக்க சொன்னேன். அப்போது அவர் அழுதார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரது நிலை மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே ஊரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன்.

சந்தேகம்
அப்போது அதிகாலை 2 மணிக்கு தலைமை கழகத்திடம் இருந்து எனக்கு போன் வந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் உடனடியாக சென்னைக்கு வாருங்கள் என்று அழைத்தனர். அப்போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.

மருத்துவ ரீதியாக...
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்றவுடன் ஜெயலலிதா இறந்துவிட்டதாக காலை 11 மணிக்கு எனக்கு தகவல் சொன்னார்கள். அதற்கு முன்பே அவர் மருத்துவ ரீதியாக இறந்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது என்றார் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதாவின் மரணம் ஏற்கெனவே மர்ம நிறைந்துள்ள நிலையில் இதுபோல் பகீர் தகவல்களை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications