ஏதோ கோபத்தில் பேசிட்டாரு விடுங்க... பிபி செக் பண்ணனும்... எச் ராஜாவை ஆதரித்து பேசும் அமைச்சர்
Recommended Video

கோவை: போலீஸ் மற்றும் உயர்நீதிமன்றம் மீது ஏதோ கோபத்தில் எச் ராஜா பேசிவிட்டார். இதையெல்லாம் பெரிதுப்படுத்தக் கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேவாலயத்துக்கு பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு மேடை அமைக்க போலீஸார் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் போலீஸையும் நீதிமன்றத்தையும் கேவலமாக விமர்சனம் செய்தார் எச் ராஜா.
இதுகுறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பின்பு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

சிலை அவமதிப்பு
அப்போது பேசிய அவர், விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது காட்டு மிராண்டிகள். அப்போது பேசிய அவர், விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது காட்டு மிராண்டிகள்.

நடவடிக்கை
தமிழகத்தில் ஜனநாயக உரிமையும், கருத்துரிமையும் இருப்பதால்தான் எச்.ராஜாவால் பேச முடிகின்றது. எச்.ராஜா பேசியதையும் , மாணவி சோபியா பேசியதையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. தமிழிசைக்கு ஏற்பட்டது போல அரசியல் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பரிசோதிக்க வேண்டும்
அதிமுக சிறப்பாக, தெம்பாக இருக்கிறது. இங்கிருந்து ஒருவர் போனால் 10 பேர் வருவார்கள். எச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் . முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

பிரச்சினையில்லாத ஆட்சி
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அவதூறு கூறியவர்கள் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடுத்தார். இப்போது பிரச்சினையில்லாத ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி வழங்கி வருகிறார்.

காவல் துறை
குற்றம் சொல்வது திமுகவின் வாடிக்கை. எதிர்க்கட்சியின் பணியை ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழ்நாடு காவல்துறை இந்திய அளவில், உலகளவில் சிறந்தது என்ற பேச்சு உள்ள நிலையில், எச்.ராஜா காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் பேசியுள்ளது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன்.

உயர் பதவி இல்லை
அவர் மீதான வழக்கில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார். அதிமுகவில் விஜயபாஸ்கருக்கு உயர்பதவி வழங்கப்பட்டுள்ளதே என கேட்டதற்கு முதல்வர்தான் உயர் பதவி. அவரை தவிர வேறு யாருக்கும் உயர் பதவி இல்லை என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications