மிஷினில் காசு; கையில் பாட்டில்! மது விற்பனையை அதிகரிக்கும் விளம்பர யுக்தி! ராஜேஸ்வரி ப்ரியா சாடல்!
சென்னை: தமிழ்நாட்டில் தானியங்கி முறையில் மது விற்பனை செய்யபடுவது, வியாபாரத்தை அதிகப்படுத்தும் விளம்பர யுக்தி என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி ப்ரியா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''டாஸ்மாக் அமைத்திருக்கும் தானியங்கி முறையில் மது விற்பனை செய்யபடும் இயந்திரம் அமைக்கபட்டது இளைஞர்கள் மத்தியில் மது வியாபாரத்தினை அதிகபடுத்தவே ஆகும்.

கூடுதல் விலைக்கு விற்பனை செய்யபடாமல் தடுக்கவே என்று சமாளிக்கும் டாஸ்மாக் நிர்வாகம் POS (point of sale) முறையில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தி ரசீது வழங்கினால் MRP யைவிட அதிக பணம் வசூல் செய்ய வாய்ப்பிருக்காது.
இதனை நான் எனது வழக்கிலும் குறிப்பிட்டுள்ளேன். டாஸ்மாக் தலைமை நிர்வாக இயக்குனரிடம் சென்ற ஆண்டு நேரிலும் கோரிக்கை வைத்துள்ளேன்.
மதுவை படிப்படியாக குறைப்போம் என்று கூறிவிட்டு விளம்பர யுக்திகளை எல்லாம் பயன்படுத்தி வியாபாரத்தினை அதிகபடுத்துவதுதான் திராவிட மாடலா? மது குடிக்க ஆசையை தூண்ட மட்டுமே அறிவியல் வளர்ச்சி உங்கள் கண்களுக்கு தெரிகிறது.

அரசு பள்ளிகளில் நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி மாணவர்களின் அறிவை வளர்க்க ஏன் சிந்திக்கவில்லை நீங்கள்? வருமானம் வந்தால் மட்டுமே சிந்திப்பீர்களா?'' இவ்வாறு ராஜேஸ்வரி ப்ரியா தனது பதிவில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications