கருணாநிதியை சந்தித்ததை கோபாலபுரம் விரும்பவில்லை- கமலிடம் பொங்கிய ரஜினி
கருணாநிதியை தாம் சந்தித்ததை கோபாலபுரம் குடும்பம் விரும்பவில்லை என கமலிடம் பொங்கியிருக்கிறார் ரஜினிகாந்த்
Recommended Video

சென்னை: ஆன்மீக அரசியலில் குதித்த போது தாம் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததை அவரது குடும்பத்தினர் எவருமே விரும்பவில்லை என கமல்ஹாசனிடம் குமுறியிருக்கிறார் ரஜினிகாந்த்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது தமது மதுரை அரசியல் கூட்டத்துக்கு வருமாறு ரஜினிகாந்தை கமல்ஹாசன் அழைத்தார்.

கமலிடம் கேள்வி கேட்ட ரஜினி
கமல்ஹாசனிடம் திமுக தலைவர் கருணாநிதியை இன்னமும் நீங்க சந்திக்கவில்லைதானே என ரஜினி கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த கமல், சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன் என்றார்.

கமலிடம் பொங்கிய ரஜினி
அப்போது, தாம் கருணாநிதியை சந்திக்க சென்றேன். அவரிடம் வாழ்த்து பெறத்தான் விரும்பினேன். ஆனால் கோபாலபுரம் இல்லத்தில் யாருக்குமே நான் அவரை சந்திப்பது பிடிக்கவில்லை.. நீங்கள் கவனமாக செல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் பேட்டியின் பின்னணி
ரஜினிகாந்தின் இந்த அறிவுரைப்படிதான் கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் மிக கவனமாகவே கமல் பேசினாராம். திராவிடம் என் கொள்கையில் இருக்கும் என்று கூறியதும் யாரையும் கலைக்க நான் அரசியலுக்கு வரவில்லை என பம்மியதும் ரஜினி கொடுத்த வார்னிங் அடிப்படையில்தானாம்.

விரைவில் வெளியே வரும்
என்னதான் ரஜினியோடு இணைந்து நான் பயணிக்கமாட்டேன் என கமல்ஹாசன் கூறி வந்தாலும் இருவரும் திரைமறைவில் ஒரே கோட்டில் பயணிப்பதாகவே கூறப்படுகிறது. காலம் வரும்போது பூனைக்குட்டிகள் வெளியே வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications