மக்களை ரஜினி சமூக விரோதிகள் என்று கூறவில்லை, ஆனால்...: தமிழிசை சவுந்தரராஜன்
Recommended Video

கோவை: ரஜினிகாந்த் பொதுமக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உரிமைக்காக போராடும் சாதாரண மக்கள் ரஜினிக்கு சமூக விரோதிகள் போன்று தெரிகிறார்களா என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரஜினிகாந்த் மக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை. தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் சமூக விரோதிகள் தான். திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மோசமான அரசியலை முன்னெடுத்து செல்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications