அரசியல் அறிவிப்பை வெளியிடாமல் ஏமாற்றிய ரஜினி... மனமுடைந்த சேலம் ரசிகர் தற்கொலை முயற்சி!
நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளில் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடாததால் மனமுடைந்த சேலத்தை சேர்ந்த ரசிகர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சேலம்: அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடாததால் சேத்தை சேர்ந்த ஏழுமலை என்ற ரசிகர் பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடந்த நவம்பர் 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிறந்தநாளன்று ரசிகர்களை சந்திப்பார் என்றும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அன்றைய தினம் இருந்தனர்.
ஆனால் அதிகாலையிலேயே போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேறி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இரவு 9 மணியளவில் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி என்று போட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எண்ட் கார்டு போட்டார்.

மனமுடைந்த ரசிகர்
இதனால் சேலம் அழகாபுரம் பாறைவட்டத்தைச் சேர்ந்த ஏழுமலை என்ற ரசிகர் மன்றத் தலைவர் கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து ஏழுமலை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை
வீட்டில் மயங்கிக் கிடந்த ஏழுமலையை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஏழுமலை உயிர் பிழைத்துள்ளார்.

ரஜினியால் தான் நல்ல செய்ய முடியும்
உயிர் பிழைத்துள்ள ஏழுமலை தான் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்றும் கூறியுள்ளார். பிறந்தநாளன்று ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று காத்திருந்தேன். ஆனால் அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும், இந்த அறிவிப்பை வெளியிடாத விரக்தியிலேயே தற்கொலைக்கு முயன்றேன் என்று அவர கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆறுதல்
இதனிடையே உயிர் பிழைத்துள்ள ஏழுமலையை சந்தித்து ரசிகர் மன்றத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். இனிமேல் இப்படியொரு காரியத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் ஏழுமலையிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications