கபாலி... 2 இடத்தில் படம் "டல்".. பட்டி பார்த்தா பட்டையைக் கிளப்பும்.. ரசிகர்கள் கருத்து
சென்னை: கபாலி படம் பார்த்த பலரும் சொல்வது மொத்தத்தில் படம் அருமையாக இருக்கிறது. இரண்டு இடங்களில்தான் சற்று ஸ்லோவாக உள்ளது. அதை சரி செய்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
இன்று வெளியான கபாலியைப் பார்க்க ஆண் ரசிகர்களைப் போலவே பெண் ரசிகைகளும் பெரும் திரளாக வந்ததை பல தியேட்டர்களில் காண முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக ஆண்களைப் போலவே கபாலி டி சர்ட்டுகளைப் போட்டுக் கொண்டு பெண் ரசிகைகள் உற்சாகமாக வந்ததைப் பார்த்தபோது "பரம்பரை" ரஜினி ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர்.
வரலாறு காணாத அளவில் பெண்கள் கூட்டம் கூடியிருந்தது ஒரு பக்கம் என்றால் இதுவரை இல்லாத அளவுக்கு கபாலிக்கு ரசிகர்கள் கூட்டம் ஒட்டுமொத்த அளவில் அதிகம்தான்.
படத்தைப் பார்த்து முடித்து விட்டு வெளியில் வந்த பெரும்பாலான ரசிகர்களுக்கும் படம் பிடித்துள்ளது. திருப்தியாகவே செல்கிறார்கள். அதேசமயம் 2 இடங்களில் படம் ஸ்லோவாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அதை சரி செய்தால் படம் இன்னும் பட்டையைக் கிளப்பும் என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
படத்தில் பலரையும் கவர்ந்திருப்பது ரஜினி உள்ளிட்டோரின் நடிப்பும், அட்டகாசமான வசனங்களும். இதுவரை தமிழ் சினிமாவில் இவ்வளவு துணிச்சலான வசனம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு கூர் தீட்டப்பட்ட வசனங்கள் அனலைக் கக்குகின்றனவாம்.
பிற்பாதியில் துப்பாக்கிச் சண்டை ஜாஸ்திதான். டப்பு டுப்பு என்று சுட்டுத் தள்ளுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் படத்தில் வன்முறை அதிகம்தான். ஆனால் ரசிகர்கள் அந்தச் சண்டைகளும் நியாயப்படுத்தும் வகையிலேயே உள்ளதாக சொல்கிறார்கள்.
மொத்தத்தில் கபாலி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications