விஜயகாந்துக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் நடத்திய ரஜினி ரசிகர்கள் கைது
திருப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் பற்றி விமர்சித்து பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தை கண்டித்து ரஜினி ரசிகர்கள் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் விஜயகாந்த் பிரசாரம் செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் ரஜினி பின்வாங்கியதை போல் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்று கூறினார்.

மேலும் ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கினார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் பற்றி விமர்சித்து விஜயகாந்த் பேசியதை கண்டிக்கும் வகையிலும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருப்பூர், காங்கேயம், அவினாசி, தாராபுரம் வெள்ளகோவில், பல்லடம் ஆகிய 8 இடங்களில் கருப்புகொடி ஏந்தி ரஜினிகாந்த் ரசிகர் மற்ற அமைப்பை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விஜயகாந்தை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். காங்கேயம் பகுதியில் அனுமதி மீறி கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications