ஏன் ரஜினி பற்றி தேவையில்லாம பேசுறீங்க... பிரேமலதாவுக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம்
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அனைத்துக் கட்சிகளுடனும் சுமூக உறவைப் பேணி வருகிறார். அனைத்துத் தலைவர்களுடனும் தோழமையுடன் பழகி வருகிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் பேசியதை வைத்து பிரேமலதா விஜயகாந்த் பேசுவது தவறு. தனது பேச்சை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
ரஜினி பெயரை பிரேமலதாவோ வேறு யாருமோ பயன்படுத்தக் கூடாது என்றும் ரஜினி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேமுதிக சார்பில் பிரசாரத்தில் குதித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், 1996-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது ரஜினிகாந்த் சொன்னார், 'மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று'. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன் என்று பேசினார்.
இந்தப் பேச்சுத்தான் ரஜினி ரசிகர்களைக் கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996-ம் ஆண்டு தேர்தலில் அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதனை பிரேமலதா தற்போது கூறுவது தேமுதிக- மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை திருப்புவது போல உள்ளது.
தமிழக அரசியலில் அனைத்து தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நல்ல சுமுகமான நட்புறவை கொண்டுள்ளார். அவர்களது ரசிகர்களும் அதுபோன்று அவரது வழியில் சென்று கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் பிரேமலதா இப்படி பேசியிருப்பது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications